செய்திகள்
கட்டுமான பணிகளை கலெக்டர் எஸ்.வினீத் பார்வையிட்ட போது எடுத்தபடம்.

ரூ.1.02 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள் கலெக்டர் எஸ்.வினீத் ஆய்வு

Published On 2021-07-28 09:12 GMT   |   Update On 2021-07-28 09:12 GMT
மடத்துக்குளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ரூ.1.02 கோடி மதிப்பீட்டு வளர்ச்சித்திட்டப்பணிகளை கலெக்டர் வினீத் பார்வையிட்டார்.
மடத்துக்குளம்:

திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் கிராம ஊராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

அதன்படி, மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியம், பாப்பான்குளம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் ரூ.76.77 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சுய உதவிக்குழு கட்டிடத்தையும் மற்றும் ரெட்டிபாளையம் ஊராட்சியில் ரூ.9.47 லட்சம் மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் கான்கீரீட் தளம் அமைக்கும் பணியனையும் என மொத்தம் ரூ.86.24 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட் டப்பணிகளையும் சங்கரமநல்லூர் பேரூராட்சி, ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.16.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 2 புதிய வகுப்பறை கட்டிட கட்டுமான பணிகளையும் மற்றும் கிருஷ்ணராயபுரம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையினையும் கலெக்டர் டாக்டர்.எஸ்.வினீத் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது, மடத்துக்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி செயற்பொறியாளர், உதவிபொறியாளர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News