செய்திகள்
கோப்புப்படம்

அன்னதான திட்ட பணியாளர்கள் பணி நிரந்தரம்- கோவில் தொழிலாளர்கள் வலியுறுத்தல்

Published On 2021-07-26 08:09 GMT   |   Update On 2021-07-26 08:09 GMT
உரிமைகளை பாதுகாக்கும் வகையில் பணி விதிமுறைகளை திருத்த வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருப்பூர்:
தமிழ்நாடு திருக்கோவில் தொழிலாளர் யூனியன் மாநில செயற்குழு கூட்டம்  திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவில் மண்டபத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் இதயராஜன் தலைமை வகித்தார்.  

இதில் இந்து அறநிலையத்துறை கோவில்களில் பணியாற்றும் அலுவலர், பணியாளர், தற்காலிக பணியாளரின் நிலைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் பணி விதிமுறைகளை திருத்த வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதிய பணி ஆணை அடிப்படையில், கோவில்களில் உள்ள தற்காலிக பணியாளரை விடுவிக்க இணை கமிஷனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். கோவில் பணியாளரின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அன்னதான திட்டத்தில் பணியாற்றும் அனைவரையும் பணிநிரந்தரம் செய்து, அதற்கான மாத சம்பளத்தை வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Tags:    

Similar News