செய்திகள்
கோப்புபடம்

தொடர் மழையால் நோய் தடுப்பு பணிகள் தீவிரம்

Published On 2021-07-24 10:26 GMT   |   Update On 2021-07-24 10:26 GMT
குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வீடுகளுக்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் நியமிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உடுமலை:

உடுமலை சுற்றுப்பகுதியில் பெய்து வரும் மழையால் கிராம ஊராட்சிகளில் நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஒன்றிய அலுவலர்கள் கூறியதாவது:-

தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக ஊராட்சிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வீடுகளுக்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் நியமிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் ‘அபேட்’ மருந்து தெளிப்பது, கொசு மருந்து அடிப்பது, கழிவுநீர் சாக்கடைகளில் கொசு மருந்து தெளிப்பது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்காமல் பார்த்து கொள்ளவும், காய்ச்சிய நீரையே பருகவும், காய்ச்சல், வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறவும் ஊராட்சிகள் வாயிலாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News