செய்திகள்
கோப்புப்படம்.

பல்லடத்தில் இருந்து சிமெண்ட் ஆலைக்கு கழிவுகள் அனுப்பி வைப்பு

Published On 2021-07-23 11:00 GMT   |   Update On 2021-07-23 11:00 GMT
தரம் பிரிக்கப்பட்ட மக்கும் குப்பைகளை கிடங்குகளில் உரமாக மாற்றி விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது.
பல்லடம்:

பல்லடம் நகராட்சி பகுதிகளில் தினசரி 15 டன் குப்பைகள் சேகரிக்கப் படுகின்றன. அவற்றை மக்கும், மக்காத குப்பைகள் என்று தரம் பிரித்து எடுக்கப்படுகிறது. அவ்வாறு தரம் பிரித்த பிளாஸ்டிக் கழிவுகள் அரியலூரில் உள்ள சிமெண்ட் தயாரிக்கும் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதுகுறித்து பல்லடம் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சங்கர் கூறியதாவது:-

தரம் பிரிக்கப்பட்ட மக்கும் குப்பைகளை கிடங்குகளில் உரமாக மாற்றி விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் இலவசமாக வழங்கி வருகிறோம். அதே போல மக்காத குப்பைகளான பிளாஸ்டிக் கழிவுகள் நவீன எந்திரம் மூலம் அழுத்தம் கொடுக்கப்பட்டு பண்டல்களாக கட்டி வைக்கப்பட்டு அரியலூரில் உள்ள சிமெண்ட் தயாரிக்கும் ஆலைக்கு இலவசமாக அனுப்பி வைக்கப்படுகிறது. 

கடந்த 20 நாட்களில் 6 ஆயிரத்து 610 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு தரம் பிரிக்கப்பட்டு சிமெண்ட் தயாரிக்கும் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்றார்.
Tags:    

Similar News