செய்திகள்
ஜி.கே.வாசன்

தமிழகத்தில் விவசாய நிலங்கள் மனைகளாக மாறுவதை தடுக்க வேண்டும்- ஜி.கே.வாசன்

Published On 2021-07-21 04:48 GMT   |   Update On 2021-07-21 04:48 GMT
மத்திய நீர்வாரிய மதிப்பீட்டின்படி தமிழ்நாட்டில் 55.32 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் நீர்ப்பாசனம் நடைபெற வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழக அரசு மாநிலத்தின் விவசாயத்திற்கும், குடிநீர் தேவைக்கும் நீராதாரத்தை பெருக்க, பாதுகாக்க, நீர்ப்பாசன முறையை மேம்படுத்த புதிய திட்டங்களை வகுத்து, செயல்படுத்தி வளமான தமிழகத்தை ஏற்படுத்த வேண்டும்.

மத்திய நீர்வாரிய மதிப்பீட்டின்படி தமிழ்நாட்டில் 55.32 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் நீர்ப்பாசனம் நடைபெற வேண்டும். ஆனால் இப்போது 32.71 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் மட்டுமே நீர்ப்பாசனம் நடைபெறுகிறது. இதனையும் அரசு கவனத்தில் கொண்டு நீர்ப்பாசன பயன்பாட்டு முறையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாய நிலங்கள் மனைகளாக மாறுவதை தவிர்க்கவும், விவசாயிகள் வேறு தொழிலுக்கு செல்வதை தவிர்க்கவும், நிலத்தடி நீரில் கழிவுகள் கலக்காமல் இருக்கவும், விவசாயத்தை ஊக்குவிக்கவும், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் தமிழக அரசு அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும்.

மேலும் தமிழக அரசு நிகழ்காலத்திற்கு மட்டுமல்ல வருங்கால தமிழக விவசாயம், மக்களின் வாழ்வாதாரம், தொழில் போன்ற பலவற்றை கவனத்தில் கொண்டு நீராதாரத்தை பெருக்க, பாதுகாக்க, நீர்ப்பாசன முறையை மேம்படுத்த புதிய திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வளமான தமிழகத்தை ஏற்படுத்த வேண்டும்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News