செய்திகள்
டெங்கு காய்ச்சல்

பாம்பன் பகுதியில் மேலும் ஒரு சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல்

Published On 2021-07-15 00:16 GMT   |   Update On 2021-07-15 00:16 GMT
ராமநாதபுரத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு பரவலாக ஏற்பட்டு வருகிறது. பாம்பன் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுவன் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளான்.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்து வருவதோடு பலி எண்ணிக்கையும் இல்லாத நிலையை அடைந்துள்ளது. இந்தநிலையில் கொரோனாவை தொடர்ந்து டெங்கு காய்ச்சல் மாவட்டத்தில் குறிப்பாக கடலோர பகுதிகளில் வேகமாக பரவி வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் 7 வயது சிறுமி உள்பட 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் பாம்பன் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுவனுக்கு தொடர் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்ட நிலையில் அவனின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அந்த சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதுடன் குறிப்பாக சிறுவர்கள் பாதிக்கப்பட்டு வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

உடனடியாக மாவட்ட நிர்வாகம் கொசு மருந்து அடிப்பு உள்ளிட்ட நோய் தடுப்பு நடவடிக்கையில் போர்க்கால அடிப்படையில் ஈடுபட வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News