செய்திகள்
கோப்புபடம்

திருப்பூர் மாவட்ட அரசு பள்ளிகளில் ஒரே வாரத்தில் 39 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்தனர்

Published On 2021-07-10 09:53 GMT   |   Update On 2021-07-10 09:53 GMT
முக்கியமாக அனைத்து பள்ளிகளிலும் அடிப்படை தேவையான கழிப்பறை, குடிநீர் வசதிகளை செய்ய வேண்டும்.
திருப்பூர்:

கொரோனா பேரிடர் காரணமாக வேலை இல்லாமல் வருமானம் இழந்த  பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தில் 1,403 அரசு, உதவிபெறும் மற்றும் மாநகராட்சி பள்ளிகள் உள்ளன. 

இப்பள்ளிகளில், இந்த கல்வியாண்டு (2021-22) மாணவர் சேர்க்கை ஜூலை மாதம் முதல் தொடங்கியது. தற்போதைய  நிலவரப்படி எல்.கே.ஜி.,முதல் பிளஸ்-2 வரை 38, 902 மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர்.

இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், தற்போது பலர் தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்த்து வருவது வரவேற்கத்தக்கது. இப்படி அரசு பள்ளி நோக்கி வருவோரை இங்கேயே தக்க வைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. 

முக்கியமாக அனைத்து பள்ளிகளிலும் அடிப்படை தேவையான கழிப்பறை, குடிநீர் வசதிகளை செய்ய வேண்டும். ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு துப்புரவுத் தொழிலாளியை நியமிக்க வேண்டும் என்றனர்.

கல்வி மேம்பாட்டு கூட்ட மைப்பு ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி கூறுகையில் அரசுப்பள்ளியில் ஆசிரியர்கள் அதிகம்போல தெரிந்தாலும் உண்மை அதுவல்ல.தொடக்கப்பள்ளிகளில் குறைந்த ஆசிரியர்களே உள்ளனர்.

இந்த நிலையை அரசு முதலில் சரிசெய்ய வேண்டும். அப்போதே மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க முடியும் என்றார்.
Tags:    

Similar News