செய்திகள்
அரசு பேருந்துகள்

அரசு பஸ்களின் ஆயுட்காலம் 9 ஆண்டுகளாக அதிகரிப்பு- தமிழக அரசு அரசாணை வெளியீடு

Published On 2021-07-10 06:06 GMT   |   Update On 2021-07-10 06:06 GMT
அரசு விரைவு பஸ்கள் 3 ஆண்டுகள் அல்லது 7 லட்சம் கிலோ மீட்டர் என்று இருந்ததை இனிவரும் காலங்களில் 7 ஆண்டுகள் அல்லது 12 லட்சம் கிலோ மீட்டர் என்று மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை: 

தமிழகத்தில் இதுவரை அரசு போக்குவரத்து கழக பஸ்களின் ஆயுட்காலம் 6 ஆண்டுகளாக இருந்தது. அதேபோல் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்களின் ஆயுட்காலம் 3 ஆண்டுகளாக இருந்தது. 

இந்த நிலையில் அரசு பஸ்கள் மற்றும் அரசு விரைவு பஸ்களின் ஆயுட் காலத்தையும், கண்டம் செய்யும் ஆண்டுகளையும் உயர்த்தி உத்தரவிட்டு   தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி அரசு பஸ்கள் ஏற்கனவே 6 ஆண்டுகள் அல்லது 7 லட்சம் கிலோ மீட்டர் என்று இருந்ததை இனிவரும் காலங்களில் 9 ஆண்டுகள் அல்லது 12 லட்சம் கிலோ மீட்டர் என்று அதிகரித்து உத்தரவிடப்பட்டுள்ளது.



அதேபோல் அரசு விரைவு பஸ்கள் 3 ஆண்டுகள் அல்லது 7 லட்சம் கிலோ மீட்டர் என்று இருந்ததை இனிவரும் காலங்களில் 7 ஆண்டுகள் அல்லது 12 லட்சம் கிலோ மீட்டர் என்று மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் தற்போது புதிய சாலைகள் போடப்பட்டு சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் நவீன தொழில்நுட்பம் கொண்ட பஸ்களும் விடப்பட்டுள்ளன. அரசு பஸ்களின் நவீன வடிவமைப்பு காரணமாக அதன் ஆயுட் காலத்தை உயர்த்தி போக்குவரத்து துறை செயலாளர் தயானந்த கட்டாரியா உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News