செய்திகள்
அமைச்சர் கீதாஜீவன்

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் 3.34 லட்சம் விண்ணப்பங்கள் நிலுவை- அமைச்சர் கீதாஜீவன்

Published On 2021-07-10 02:40 GMT   |   Update On 2021-07-10 02:40 GMT
சத்துணவு, அங்கன்வாடியில் 49 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. அங்குள்ள பணிக்காக புதிதாக விண்ணப்பங்களை வரவேற்க உள்ளோம்.
சென்னை:

சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அளித்த பேட்டி வருமாறு:-

தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்குவதாக அறிவித்து, அதற்கான நிதியை கடந்த அரசு ஒதுக்கவில்லை. சேலத்தில் 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணமான பயனாளிக்கு வழங்கினோம். இந்த திட்டத்தில் இரண்டேகால் ஆண்டுகள் நிலுவையில் பல மனுக்கள் உள்ளன. திருமணத்திற்காக வந்த 3 லட்சத்து 34 ஆயிரத்து 913 மனுக்கள் இன்னும் நிலுவையில் உள்ளன.

விண்ணப்பங்களை வாங்கிவிட்டு பணம் ஒதுக்கீடு செய்யாமல் விட்டுவிட்டனர். தற்போது இந்த திட்டத்திற்கு மட்டும் ரூ.2,703 கோடி நிதி தேவைப்படுகிறது.

முன்பே வழங்கப்பட்ட விண்ணப்பங்களில் இருந்து வரிசையாக பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

சத்துணவு, அங்கன்வாடியில் 49 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. அங்குள்ள பணிக்காக புதிதாக விண்ணப்பங்களை வரவேற்க உள்ளோம்.


Tags:    

Similar News