செய்திகள்
மன்னார்குடி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை அமைக்கும் பணிகள் நடந்தபோது எடுத்தபடம்.

மன்னார்குடி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் ஆலை அமைக்கும் பணி தொடக்கம்

Published On 2021-07-09 10:32 GMT   |   Update On 2021-07-09 10:32 GMT
மன்னார்குடி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் ஆலை அமைக்கும் பணி தொடங்கியது. இந்த ஆலை நிமிடத்துக்கு 1,000 லிட்டர் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாகும்.
மன்னார்குடி:

கொரோனா தொற்றின் 2-வது அலை தீவிரம் அடைந்தபோது தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டன. கொரோனா 2-வது அலையின் தாக்கம் சற்று தணிந்து உள்ள நிலையில் வருங்காலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மன்னார்குடியில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை அமைப்பதற்கு பிரதம மந்திரி கேர் நிதியில் இருந்து ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டது.

இந்த நிதி மூலமாக மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (டி.ஆர்.டி.ஓ.) நிறுவனம் பெங்களூருவில் இருந்து ஆக்சிஜன் ஆலைக்கு தேவையான எந்திரங்களை மன்னார்குடிக்கு அனுப்பியது.

இந்த எந்திரங்கள் நேற்றுமுன்தினம் மன்னார்குடி அரசு மருத்துவமனையை வந்தடைந்தது. இதனை தொடர்ந்து எந்திரத்தை பொருத்தி ஆலையை அமைக்கும் பணிகள் நேற்று தொடங்கின.

இந்த ஆலை நிமிடத்துக்கு 1,000 லிட்டர் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது என்றும், இங்கிருந்து ஒரே நேரத்தில் 200 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வினியோகிக்க முடியும் என்றும் ஆலையை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள என்ஜினீயர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News