செய்திகள்
கோப்புபடம்

இயற்கை வளங்களை சுரண்டி விற்றால் போராட்டம்-பா.ஜ.க.,அறிவிப்பு

Published On 2021-07-07 08:12 GMT   |   Update On 2021-07-07 08:12 GMT
விவசாயத்துக்கு அ.தி.மு.க. ஆட்சியில் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது.
பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள ரங்கசமுத்திரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சி மாநில விவசாய அணித்தலைவர் ஜி.கே.நாகராஜ் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் மின்வெட்டே இல்லை. மின்மிகை மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வந்தது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் கூடவே மின் வெட்டும் வந்துவிட்டது.

விவசாயத்துக்கு அ.தி.மு.க. ஆட்சியில் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது. ஆனால் தி.மு.க. ஆட்சியில் மும்முனை மின் விநியோகத்தில் குளறுபடி ஆகி வருகிறது. பல்வேறு இடங்களுக்கு மும்முனை மின்சாரம் கிடைப்பதில்லை.

எம் சான்ட் என்னும் மாற்று மணல், கற்கள், ஆற்று மணல் போன்ற இயற்கை வளங்கள் சுரண்டி கேரளாவுக்கு கடத்தி விற்பனை செய்யப்படுகின்றன. அதனை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

இதே நிலை நீடித்தால் பா.ஜ.க. விவசாய அணி சார்பில் மாநிலம் தழுவி போராட்டம் நடத்தப்படும். மழை வளத்தை பெறுக்க மாநிலம் முழுவதும்பா.ஜ.க.சார்பில் 12 லட்சம் மரக்கன்றுகள் நடப்படவுள்ளது என்றார்.
Tags:    

Similar News