செய்திகள்
கோப்புபடம்

வனகிராம குழுக்கள் மூலம் கொரோனா விழிப்புணர்வு-மலைவாழ் மக்கள் வேண்டுகோள்

Published On 2021-07-07 07:32 GMT   |   Update On 2021-07-07 07:32 GMT
மலைவாழ் கிராமங்களில் கொரோனா தொற்றுப்பரவல் குறித்த அச்சம் நிலவி வருகிறது.
உடுமலை:

உடுமலை அமராவதி வனச்சரகங்கள் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் 2008ம் ஆண்டு சேர்க்கப்பட்டது. அப்போது வன கிராம குழுக்கள் உருவாக்கப்பட்டது.

இத்திட்டம் குறித்து அப்போது விழிப்புணர்வு இல்லாத நிலையில், மக்களிடையே எதிர்ப்பு கிளம்பியது.இதையடுத்து புலிகள் காப்பக விதிமுறைகள் குறித்து வனத்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும் புலிகள் காப்பகத்தின் வெளிச்சுற்று எனப்படும் வன எல்லை கிராமங்களின் மேம்பாட்டிற்கும் திட்டத்தில் நிதி ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதற்காக ஒவ்வொரு கிராமத்திலும் வனத்துறை, மக்கள் பிரதி நிதிகள், தன்னார்வலர்கள் அடங்கிய கிராமக்குழு அமைக்க வழிகாட்டுதல் வழங்கப்பட்டது.

உடுமலை வனச்சரக பகுதியில் மட்டும் 54 கிராம குழுக்கள் துவங்கப்பட்டது. இக்குழுக்களுக்கு முதற்கட்டமாக ஒரு லட்சம் ரூபாய் வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தன்னார்வ அமைப்புகள் வாயிலாக  பணிகளை மேற்கொள்வதற்கான கருத்துருவும் கேட்கப்பட்டது. அதன்பின்னர் குழுக்கள் அனைத்தும் போதிய செயல்பாடு இல்லாமல் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டன. 

தற்போது மலைவாழ் கிராமங்களில் கொரோனா தொற்றுப்பரவல் குறித்த அச்சம் நிலவி வருகிறது. எனவே வனகிராம குழுக்களை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வந்து அக்கிராமங்களில் விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். 
Tags:    

Similar News