செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள்

ரெயிலில் கடத்த இருந்த ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்- ஒருவர் கைது

Published On 2021-07-01 09:31 GMT   |   Update On 2021-07-01 09:31 GMT
திருப்பத்தூரிலிருந்து கர்நாடகா மாநிலத்திற்கு கடத்துவதற்காக மர்ம நபர்கள் பச்சூர் ரெயில் நிலையத்திற்கு அரிசி மூட்டைகளை மர்ம நபர்கள் கொண்டு வந்து இறக்கிக் கொண்டிருந்தனர்.
வாணியம்பாடி:

திருப்பத்தூர் மாவட்டத்திலிருந்து தொடர்ந்து கர்நாடகா, ஆந்திர மாநிலங்களுக்கு ரெயில்கள் மூலம் ரேஷன் அரிசி கடத்துவதாக கிடைத்த தகவலின் பேரில் வேலூர் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையில் வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி, ஜோலார்பேட்டை, பச்சூர் பகுதியிலும் மற்றும் ரெயில் நிலைய பகுதிகளிலும் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருப்பத்தூரிலிருந்து கர்நாடகா மாநிலத்திற்கு கடத்துவதற்காக மர்ம நபர்கள் பச்சூர் ரெயில் நிலையத்திற்கு அரிசி மூட்டைகளை மர்ம நபர்கள் கொண்டு வந்து இறக்கிக் கொண்டிருந்தனர். அவற்றை போலீசார் சோதனை செய்த போது அதில் ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக கங்காதரன் (வயது 39) என்பவரை போலீசார் கைது செய்து, ஒரு டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News