செய்திகள்
கோப்புப்படம்

அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தீவிரம்

Published On 2021-06-30 07:11 GMT   |   Update On 2021-06-30 07:11 GMT
அரசு அறிவுறுத்தியபடி உரிய பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிகள் பின்பற்ற வேண்டும்.
திருப்பூர்:

கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான பணிகளை துவக்க வேண்டுமென பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.அவ்வகையில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை தொடங்கியது. பெற்றோர்களும் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர்.

இதுகுறித்து தலைமை ஆசிரியர்கள் கூறுகையில்:

‘சமூக இடைவெளி கருதி முதல் நாளில் மாணவர் எண்ணிக்கை அதிகமுள்ள நகர்ப்புற பள்ளிகளில் தேவைப்படும் மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் (டி.சி.,) வழங்கப்பட்டது.மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு மாணவர்கள் விருப்பப்படி அவர்களின் விரும்பிய வகுப்புகளில் சேர்ந்தனர் என்றனர்.

திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் கூறியதாவது:

அரசு அறிவுறுத்தியபடி உரிய பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிகள் பின்பற்ற வேண்டும். மாணவர்களுக்கு வழங்குவதற்காக புத்தகங்கள் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும் பள்ளிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றன.தற்போது கிராமப்பகுதியில் உள்ள துவக்கநிலை மாணவர்களுக்கு மட்டும் பாடபுத்தகங்கள் வழங்கபடுகின்றன. கொரோனா பரவல் காரணமாக நகர்ப்புற பள்ளி மாணவர்களுக்கு பல கட்டமாக பிரித்து பாட புத்தகங்கள் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.
Tags:    

Similar News