செய்திகள்
கைது

மதுரையில் ரேசன் அரிசி கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது

Published On 2021-06-27 09:35 GMT   |   Update On 2021-06-27 09:35 GMT
ரேசன் அரிசி கடத்தலில் தொடர்ந்து ஈடுபடும் குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் எச்சரிக்கை விடுத்தார்.
மதுரை:

மதுரையில் ரேசன் பொருட்கள் கடத்தப்படுவதாக குடிமை பொருள் வழங்கல் துறைக்கு தகவல் வந்தது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவிட்டார்.

அதன்படி போலீசார் வலையங்குளம் ரோடு, சோளங்குருணி பகுதியில் சோதனை நடத்தினர். அங்கு வந்த ஒரு மினி லாரியில் 50 சாக்குகளில் 2500 கிலோ ரேசன் அரிசி பிடிபட்டது.

இவற்றை கடத்தியதாக செல்லூர் அருள்தாஸ்புரம் முனியாண்டி கோவில் தெருவைச் சேர்ந்த செல்வநாயகம் (வயது 40), தேனி மாவட்டம் சுருளிப்பட்டி பழைய ரைஸ்மில் தெருவைச் சேர்ந்த கருப்பசாமி (37), வில்லாபுரம் மணிகண்டன் (26) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

இவர்களில் செல்வநாயகம் மீது கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ரேசன் அரிசி கடத்தியதாக வழக்கு நிலுவையில் உள்ளது.

இதையடுத்து மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் உத்தரவின் பேரில் ரேசன் பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், செல்வநாயகத்தை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

ரேசன் அரிசி கடத்தலில் தொடர்ந்து ஈடுபடும் குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் எச்சரிக்கை விடுத்தார்.

Tags:    

Similar News