செய்திகள்
கோப்புப்படம்

ரெயில் நிலையத்திற்குள் முககவசம் அணியாமல் வந்தால் ரூ. 500 அபராதம்

Published On 2021-06-27 08:00 GMT   |   Update On 2021-06-27 08:00 GMT
சுகாதாரத் துறையின் வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது பின்பற்ற வேண்டும்.
திருப்பூர்:

திருப்பூரில் கொரோனா தொற்று வேகமாக குறைந்து வருகிறது. திருப்பூர் மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக மாற்றும் வகையில் சுகாதாரத் துறையினர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது  பஸ் போக்குவரத்து இல்லாததால் பொதுமக்கள் அனைவரும் ரெயில்கள் மூலம் செல்வதற்கு அதிக அளவில் குவிந்து வருகின்றனர். இதனால் ரெயில் நிலையத்தில் தினமும் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

 எனவே ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றா விட்டால் அபராதம் விதிக்கப்படும் எனவும், மேலும் ரெயில் நிலையம் நுழைவு வாயிலில் முக கவசம் அணிந்து உள்ளே வரவும் , உங்கள் பாதுகாப்பை நீங்கள் உறுதி செய்ய தனித்திருங்கள், விழித்திருங்கள் என விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளது.

சுகாதாரத்துறையின் இந்த வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது பின்பற்ற வேண்டும்.மீறினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என திருப்பூர் ரெயில்வே பாதுகாப்பு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் ரெயில் நிலையத்திற்கும் வரும் நபர்கள் முககவசம் அணிந்து வருகின்றனரா? என போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
Tags:    

Similar News