செய்திகள்
கோப்புப்படம்

பஸ் வசதியின்றி சிரமப்படும் ஆசிரியர்கள்

Published On 2021-06-26 07:53 GMT   |   Update On 2021-06-26 07:53 GMT
ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தப்பட்டு போக்குவரத்து சேவை துவக்கப்படாமல் இருந்தால் பலரும் பாதிப்படைவர்.
உடுமலை:

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் திறக்கப்பட்டு உடுமலை சுழற்சி முறையில் வரவழைக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிகள்தோறும் 50 சதவீத ஆசிரியர்கள் வாரத்தில் மூன்று நாட்களும் மீதமுள்ள 50 சதவீத ஆசிரியர்கள் அடுத்த மூன்று நாட்களும் பள்ளிக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர்.

திருப்பூர், உடுமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு கோவை, திண்டுக்கல், கோபி உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் இருந்தும் ஆசிரியர்கள் பலர் தினமும் வருகை புரிகின்றனர். ஆனால் ஊரடங்கால் போக்குவரத்து வசதி இல்லாதிருப்பது அவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தப்பட்டு போக்குவரத்து சேவை துவக்கப்படாமல் இருந்தால் பலரும் பாதிப்படைவர்.

எனவே குறிப்பிட்ட வழித்தடங்களில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சென்று திரும்பும் வகையில் சிறப்பு பஸ் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 
Tags:    

Similar News