செய்திகள்
கொரோனா வைரஸ்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 37 பேருக்கு கொரோனா

Published On 2021-06-25 13:41 GMT   |   Update On 2021-06-25 13:41 GMT
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 19 ஆயிரத்து 479 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 37 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 19 ஆயிரத்து 479 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று சிகிச்சை முடிந்து 83 பேர் வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 18 ஆயிரத்து 721 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 429 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். 329 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
Tags:    

Similar News