செய்திகள்
கோப்புப்படம்

கத்தரிக்காய் விலை குறைவு-விவசாயிகள் கண்ணீர்

Published On 2021-06-23 07:00 GMT   |   Update On 2021-06-23 07:00 GMT
திருப்பூர் தெற்கு உழவர் சந்தைக்கு ஒரு டன் பவானி ரக கத்தரிக்காய் வருகிறது.
திருப்பூர்:

கொரோனா ஊரடங்கில் தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் காய்கறிகள் சந்தைக்கு அதிகளவில் குவிய துவங்கியுள்ளன.வழக்கமாக கத்தரிக்காயில் பவானி ரகம் கூடுதல் விலைக்கு விற்கப்படும். தற்போது திருப்பூர் தெற்கு உழவர் சந்தைக்கு ஒரு டன் பவானி ரக கத்தரிக்காய் வருகிறது. ஆனால் ஓட்டல்கள் செயல்படாததால் வாங்கி செல்வோர் குறைவாக உள்ளனர். 

ஒரு கிலோ ரூ.60 முதல் ரூ.80 வரை விற்ற கத்தரிக்காய் தற்போது ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்படுகிறது. தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு 2.5 டன் கத்தரிக்காய் வருகிறது. அவை ஒரு கிலோ ரூ.25க்கு விற்கப்படுகிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்:

விலையை எதிர்பார்த்து அதிகளவில் பயிரிட்டோம்.ஆனால் ஊரடங்கால் சந்தைக்கு கொண்டு வந்து சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது ஒரே நேரத்தில் பல இடங்களில் இருந்து பவானி கத்தரிக்காய் வந்து குவிவதால் விலை குறைந்துள்ளது என்று கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
Tags:    

Similar News