செய்திகள்
கோப்புப்படம்

டிஜிட்டல் பரிவர்த்தனையில் தபால் வங்கி சேவை

Published On 2021-06-23 06:30 GMT   |   Update On 2021-06-23 06:30 GMT
தபால் துறை சார்பில் ‘இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி’ (ஐ.பி.பி.பி.,) செயலி பயன்பாட்டில் உள்ளது.
திருப்பூர்:

மத்திய அரசு ரொக்க பரிவர்த்தனையை விட டிஜிட்டல் பரிவர்த்தனையை அதிகளவு ஊக்குவித்து வருகிறது. இதனால் ஸ்மார்ட் போன் மூலம் பண பரிவர்த்தனை மேற்கொள்ள பல்வேறு செயலிகள் புழக்கத்தில் உள்ளன.

இந்தநிலையில் தபால் துறை சார்பில் ‘இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி’ (ஐ.பி.பி.பி.,) செயலி பயன்பாட்டில் உள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தபால் நிலைய சேவைகளை பெற முடியும். தற்போது ஐ.எப்.எஸ்.சி., (இந்தியன் பைனான்சியல் சிஸ்டம் கோடு) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இனி தபால் நிலைய சேமிப்பு கணக்குகளையும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.

இதுகுறித்து திருப்பூர் தபால் துறை அதிகாரிகள் கூறுகையில்:

‘டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு ஐ.எப்.எஸ்.சி., அவசியம். அனைத்து தபால் அலுவலகங்களுக்கும் 11 இலக்க எண் வழங்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி எந்த மொபைல் செயலியிலும் பணபரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என்றனர்.
Tags:    

Similar News