செய்திகள்
கோப்புப்படம்

அரசு கேபிள் டி.வி.,செட்டாப் பாக்சை மாற்றினால் நடவடிக்கை- ஆப்ரேட்டர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை

Published On 2021-06-19 08:06 GMT   |   Update On 2021-06-19 08:06 GMT
அரசு கேபிள் சிக்னல் தொடர்ந்து எவ்வித தடையும் இன்றி செயல்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
திருப்பூர்:

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி., நிறுவனத்தால் பொதுமக்களுக்கு இலவசமாக செட்டாப்பாக்ஸ்களை மாத சந்தா தொகை ரூ.140 மற்றும் 18 சதவீத ஜி.எஸ்.டி. கட்டணத்தில் உள்ளூர் கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. 

அரசு செட்டாப் பாக்ஸ் பெற்று பயனடைந்து வரும் சந்தாதாரர்கள் தங்களின் விருப்பம் இல்லாமல் ஆப்ரேட்டர்கள் அரசு செட்டாப் பாக்சை மாற்றினாலோ அல்லது அரசு சிக்னல் இனி வராது என்று தவறான தகவலை கூறி அரசு செட்டாப் பாக்சை மாற்றினால் உடனடியாக 0421-2971142 என்ற எண்ணில் திருப்பூர் அரசு கேபிள் டி.வி., அலுவலகத்துக்கு புகார் தெரிவிக்கலாம். 

அரசு கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்கள் வேறு நிறுவனத்திற்கு செல்லும்போது அரசுக்கு செலுத்தவேண்டிய நிலுவை தொகை மற்றும் அரசிடம் பெற்ற செட்டாப் பாக்ஸ்களை ஒப்படைக்க வேண்டும்.இதற்கு மாறாக தமிழ்நாடு அரசுக்கு வருவாய் இழப்பீடு செய்யும் ஆப்ரேட்டர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். 

அரசு கேபிள் சிக்னல் தொடர்ந்து எவ்வித தடையும் இன்றி செயல்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் செட்டாப் பாக்ஸ்கள் மாத சந்தா கட்டணம் செலுத்தி பார்ப்பதற்கு மட்டுமே தவிர செட்டாப் பாக்ஸ்களை உரிமை கோர முடியாது. 

செட்டாப் பாக்ஸ் பழுதடைந்தாலோ, மாதாந்திர கட்டணம் செலுத்தாமல் துண்டித்திருந்தாலோ, குடிபெயர்ந்து சென்றாலோ, தனிநபர் செட்டாப் பாக்ஸ் பயன்படுத்தினாலோ, அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் மூலம் வழங்கப்பட்ட செட்டாப் பாக்ஸ், ரிமோட், பவர் அடாப்டர் ஆகியவற்றை உள்ளூர் கேபிள் டி.வி. ஆப்ரேட்டரிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். 

செட்டாப் பாக்ஸ்களை வாடிக்கையாளர்களிடம் இருந்து பெற்று திருப்பூர் அரசு கேபிள் டி.வி. அலுவலக தனி தாசில்தாரிடம் உடனடியாக  ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு ஒப்படைக்காமல் காலம் தாழ்த்தினால் சம்பந்தப்பட்ட கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத்  தெரிவித்துள்ளார். 
Tags:    

Similar News