செய்திகள்
மாற்றுத் திறனாளிகளுக்கு கலெக்டர் அரிசி வழங்கினார்

திருப்பத்தூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி- கலெக்டர் வழங்கினார்

Published On 2021-06-15 11:35 GMT   |   Update On 2021-06-15 11:35 GMT
ஜோலார்பேட்டை ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ரூ.85 ஆயிரம் மதிப்பில் அரிசி மூட்டைகள் வாங்கப்பட்டு 167 பேருக்கு தலா 10 கிலோ அரிசி வழங்கும் நிகழ்ச்சி திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
திருப்பத்தூர்:

கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிட கலெக்டர் சிவன்அருள் வேண்டுகோள் விடுத்தார்.
அதனைத் தொடர்ந்து ஜோலார்பேட்டை ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ரூ.85 ஆயிரம் மதிப்பில் அரிசி மூட்டைகள் வாங்கப்பட்டு 167 பேருக்கு தலா 10 கிலோ அரிசி வழங்கும் நிகழ்ச்சி திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஜோலார்பேட்டை ஒன்றிய தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார தலைவர் எஸ்.சிவகுமார் தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் பி.பரசுராமன் முன்னிலை வகித்தார்.

கலெக்டர் சிவன்அருள், ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. ஆகியோர் மாற்றுத் திறனாளிகளுக்கு அரிசி மூட்டைகளை வழங்கினர். நிகழ்ச்சியில் தாசில்தார் சிவப்பிரகாசம், உதவும் உள்ளங்கள் தலைவர் ரமேஷ், முன்னாள் நகராட்சித் தலைவர் அரசு, பொருளாளர் ஜெயந்தி மற்றும் ஆசிரியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் முடிவில் விஜயகுமார் நன்றி கூறினார்.
Tags:    

Similar News