செய்திகள்
ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்காத 355 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய்- ராதாகிருஷ்ணன்

Published On 2021-06-14 09:35 GMT   |   Update On 2021-06-14 15:38 GMT
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ மனைகளில் ஐ.சி.யூ., ஆக்சிஜன் படுக்கைகள் உள்பட 49 ஆயிரம் படுக்கைகள் காலியாக உள்ளன.

சென்னை:

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவ மனையில்  கொரோனா தடுப்பூசி  மையத்தை சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

ஒரு கோடி தடுப்பூசிகள் என்ற இலக்கை தமிழகம் எட்டியுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும்  தடுப்பூசி  செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் பயனாக தினசரி கொரோனா தொற்று பாதிப்பு 14 ஆயிரமாக குறைந்துள்ளது.

 



இது மன நிறைவை அளித்தாலும் பொது மக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு அளித்தால்தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். நோய் தடுப்பு நடவடிக்கையில் தமிழகம் முழுவதும் நல்ல முன்னேற்றம் உள்ளது.

இதையும் படியுங்கள்.... கொரோனா 3-வது அலையை சமாளிக்க 1 லட்சம் படுக்கைகள் தயார்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ மனைகளில் ஐ.சி.யூ., ஆக்சிஜன் படுக்கைகள் உள்பட 49 ஆயிரம் படுக்கைகள் காலியாக உள்ளன. தமிழகத்தில் 1348 பேர்   கருப்பு பூஞ்சை  நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 355 பேர் கொரோனா தொற்று ஏற்படாதவர்கள். மாநிலத்தில் தற்போது 9,520 கருப்பு பூஞ்சை மருந்துகள் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு, மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் ஆகியோர் உடனிருந்தனர். திருவள்ளூர் அரசு மருத்துவமனையிலும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

Tags:    

Similar News