செய்திகள்
கொள்ளை

கோவையில் அம்மன் நகை திருடிய வாலிபர்- 3 கோவில்களில் கைவரிசை

Published On 2021-06-12 10:33 GMT   |   Update On 2021-06-12 10:33 GMT
கோவையில் அம்மன் நகை திருடிய வழக்கில் கைதான வாலிபர் மேலும் 3 கோவில்களில் கைவரிசை காட்டியது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கோவை:

கோவை சிங்காநல்லூரை அடுத்த நீலிகோணம் பாளையத்தில் பேச்சியம்மன் கோயில் உள்ளது. நேற்று காலை அங்கு வந்த வாலிபர் ஒருவர் கோவிலுக்குள் புகுந்து அம்மன் கழுத்தில் இருந்த தங்கத் தாலியை திருடிக்கொண்டு ஓட்டம் பிடித்தார்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கோவில் பூசாரி சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் அந்த வாலிபரை துரத்தி மடக்கி பிடித்து சிங்காநல்லூர் போலீசில் ஒப்படைத்தனர்.

போலீஸ் விசாரணையில் அந்த வாலிபர் ஒண்டிப்புதூரை சேர்ந்த செந்தில் பிரபு (வயது 36) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

மேலும் விசாரணையில் செந்தில் பிரபு 2 நாட்களுக்கு முன்பு இருகூர் மகாத்மா காந்தி ரோட்டில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் 3.5 கிராம் தங்க செயின் மற்றும் நீலிகோணாம்பாளையம் கோபால கிருஷ்ணன் கோவில் உண்டியலில் ரூ.6 ஆயிரம் திருடியதும் தெரியவந்தது. கடந்த 2 நாட்களில் செந்தில் பிரபு 3 கோவில்களில் கைவரிசை காட்டி உள்ளார். இதனையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News