செய்திகள்
கோப்புப்படம்

தூத்துக்குடியில் பிறந்து 7 நாட்களே ஆன குழந்தைக்கு கொரோனா

Published On 2021-06-06 00:59 GMT   |   Update On 2021-06-06 00:59 GMT
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பச்சிளங்குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் குழந்தை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி:

தூத்துக்குடி டேவிஸ்புரம் பகுதியை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி, தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு மாதாந்திர பரிசோதனைக்கு சென்ற போது அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவருக்கு தனியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவருக்கு கடந்த 29-ந் தேதி அழகான ஆண் குழந்தை பிறந்தது.

தாய்க்கு கொரோனா தொற்று இருந்ததால் குழந்தைக்கும் பரிசோதனை செய்தனர். முதல்நாளில் நெகட்டிவ் என்று தெரியவந்தது. பின்னர் மீண்டும் 5 நாட்கள் கழித்து எடுத்த பரிசோதனையில் அந்த குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து அந்த குழந்தை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பச்சிளங்குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News