செய்திகள்
மழை

தூத்துக்குடி, கோவில்பட்டி பகுதியில் திடீர் மழை- பொதுமக்கள் மகிழ்ச்சி

Published On 2021-06-05 12:33 GMT   |   Update On 2021-06-05 12:33 GMT
தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கி இருப்பதால், தூத்துக்குடி மாவட்டத்திலும் பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டு வந்தது.
தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் அக்கினி நட்சத்திரம் தொடங்கிய போது வெயில் மக்களை வாட்டிவிடும் என்று மக்கள் மிகுந்த அச்சத்தில் இருந்தனர். ஆனால் அக்கினி நட்சத்திரம் புயல் மழையுடன் தொடங்கியதால், வந்த வேகத்தில் உக்கிரத்தை காட்டாமலேயே அக்கினி நட்சத்திரம் விடைபெற்று சென்று விட்டது.

கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் இருந்து வந்தது. ஆனாலும் பலத்த காற்றும் வீசி வந்தது. இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கி இருப்பதால், தூத்துக்குடி மாவட்டத்திலும் பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டு வந்தது.

நேற்று மாலையில் திடீரென வானில் கருமேகங்கள் திரண்டன. திடீரென பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. அப்போது பலத்த இடியுடன் மழை பெய்தது. இந்த மழை சுமார் ½ மணி நேரம் நீடித்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி, ஆறுமுகநேரி, திருச்செந்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியது. இந்த திடீர் மழையால் வெயிலின் தாக்கம் முற்றிலும் குறைந்து உள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Tags:    

Similar News