செய்திகள்
மழை

மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மழை

Published On 2021-06-05 06:49 GMT   |   Update On 2021-06-05 06:49 GMT
உசிலம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாய நிலங்களில் மழைநீர் புகுந்ததால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதம் அடைந்தன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

ராமநாதபுரம்:

தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் நேற்று மாலை திடீரென மழை பெய்தது.

மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி, அல்லிகுளம், வாலாந்தூர், குப்பனம்பட்டி மற்றும் மதுரை மாநகர் பகுதிகளில் நேற்று மதியம் 3 மணி முதல் சாரலுடன் தொடங்கிய மழை சிறிது நேரத்தில் பலத்த மழையாக மாறியது.

இடி, மின்னலுடன் கூடிய மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

உசிலம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாய நிலங்களில் மழைநீர் புகுந்ததால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதம் அடைந்தன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் நேற்று மாலை சுமார் ஒரு மணி நேரம் மழை பெய்தது. இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதனால் இரவில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது. தொடர்ந்து இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. பல இடங்களில் இன்று லேசான தூறல் பெய்தது. 

Tags:    

Similar News