செய்திகள்
கோப்புடம்

ஊரடங்கை மீறி உலா வரும் வாகன ஓட்டிகள்

Published On 2021-06-03 06:04 GMT   |   Update On 2021-06-03 12:55 GMT
உடுமலையில் போலீசார் சோதனையில் ஈடுபடாமல் உள்ளதால் ஊரடங்கை மீறி வாகன ஓட்டிகள் உலா வருகின்றனர். இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
உடுமலை

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தளர்வுகளற்ற ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து தேவையில்லாமல் ஊர் சுற்றும் வாகன ஓட்டிகளை கட்டுப்படுத்தும் வகையில் உடுமலை காவல் நிலைய எல்லை  பகுதிகளான பழனி சாலை,பொள்ளாச்சி சாலை,கொழுமம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சோதனைச்சாவடி அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இது தவிர உடுமலை மத்திய பஸ் நிலையம், தளி சாலை சந்திப்பு,பைபாஸ் சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு தேவையற்ற வகையில் சுற்றும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தனர். இதனால் உடுமலை நகர வீதிகளில் வாகன போக்குவரத்து மிகவும் குறைந்திருந்தது. 

ஆனால் தற்போது சோதனைச் சாவடிகளில் போலீசார் இருப்பதில்லை. 
இதனால் உடுமலை சாலைகளில் அதிக அளவில் வாகன போக்குவரத்து காணப்படுகிறது. இதன் மூலம் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News