செய்திகள்
கோப்புபடம்

கரும்பு அறுவடைப்பணிகள் தீவிரம்

Published On 2021-05-30 06:26 GMT   |   Update On 2021-05-30 06:26 GMT
மடத்துக்குளம் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிமாவட்ட தொழிலாளர்கள் கரும்பு அறுவடைப்பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மடத்துக்குளம்:

மடத்துக்குளம் அமராவதி ஆயக்கட்டு பகுதிகளில் ஆண்டுதோறும், 4,000 ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி நடக்கிறது. இவ்வளவு பரப்பளவில் கரும்பு உற்பத்தி செய்யப்பட்டாலும் இதை அறுவடை செய்யும் தொழிலாளர்கள் போதிய அளவு இந்தப்பகுதியில் இல்லை.இதனால் ஆண்டுதோறும் தொழிலாளர் பற்றாக்குறை நிலவுகிறது.சில இடங்களில் கரும்பு வெட்டுவதற்கு தாமதமாகி விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. 

இதற்குத்தீர்வாக வெளிமாவட்டங்களில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வந்து இங்கு கரும்பு வெட்டும் பணி நடக்கிறது.அமராவதி சர்க்கரை ஆலையின் களப்பணியாளர்கள் வெளி மாவட்டங்களுக்குச்சென்று இந்த தொழிலாளர்களை அழைத்து வருகின்றனர்.நடப்பாண்டு, தர்மபுரி, சேலம், எடப்பாடி, கரூர், லாலாபேட்டை, கடலூர், பண்ருட்டி, தேனி, பெரியகுளம் ஆகிய பகுதியிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இங்கு வந்து தங்கியுள்ளனர்.இவர்கள் கரும்புகளை வெட்டி டிராக்டர்கள், வண்டி, லாரிகளில் பாரம் ஏற்றி ஆலைக்கு அனுப்பி வைக்கின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

வெளிமாவட்ட தொழிலாளர்கள் இந்தப்பகுதியில் விளைந்துள்ள பல ஆயிரம் ஏக்கர் கரும்பு அறுவடை முடியும் வரை, சில மாதங்கள் தங்கியிருப்பார்கள்.இவர்கள் தங்குவதற்கான இடம், உணவுக்கான ஏற்பாடுகளை அறுவடை நடக்கும் விளை நிலத்தில் கரும்பு சாகுபடி செய்த விவசாயிகள் செய்து கொடுக்கின்றனர். கரும்பு வெட்டுவதற்கான வெட்டுக்கூலியை ஆலை நிர்வாகத்தினர் நிர்ணயம் செய்து வழங்குவர் என்றனர்.
Tags:    

Similar News