செய்திகள்
சென்னைக்கு ரெயிலில் கொண்டு வரப்பட்ட ஆக்சிஜன் டேங்கர்கள்

ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் இன்று 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் சென்னை வருகை

Published On 2021-05-23 14:32 GMT   |   Update On 2021-05-23 15:19 GMT
சென்னை மற்றும் புறநகர் அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் இருந்து 80 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜனை கொண்டு வந்துள்ளது.
சென்னை:

கொரோனா தொற்றின் 2வது அலை காரணமாக நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில், மருத்துவ ஆக்சிஜனுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் தமிழகத்திற்கான மருத்துவ திரவ ஆக்சிஜன் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில், வட மாநிலங்களில் இருந்து ரெயில்கள் மூலம் ஆக்சிஜன் இறக்குமதி செய்யப்படுகிறது. இதுவரை 11 ரெயில்கள் மூதல் 633 டன் ஆக்சிஜன் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இன்று 12-வது ஆக்சிஜன் ரெயில் திருவொற்றியூர் வந்ததடைந்தது. இங்கிருந்து சென்னை மற்றும் புறநகர் அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் இருந்து 80 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜனை கொண்டு வந்துள்ளது. இதுவரை ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மூலம் 703 டன் திரவ மருத்துவ ஆகிஜன் சென்னை வந்தடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News