செய்திகள்
திருப்பூரில் ஊரடங்கு விதிகளை மீறிய பனியன் நிறுவனத்திற்கு அபராதம் விதித்த அதிகாரிகள்.

விதிகளை மீறிய பனியன் நிறுவனத்திற்கு அபராதம்

Published On 2021-05-18 06:05 GMT   |   Update On 2021-05-18 06:05 GMT
திருப்பூரில் ஊரடங்கு விதிகளை மீறிய பனியன் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது.
திருப்பூர்:

திருப்பூர் எல்.ஆர்.ஜி அரசு பெண்கள் கல்லூரி அருகே விதிமுறைகளை மீறி ஒரு பனியன் ஏற்றுமதி நிறுவனம் செயல்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். 

அப்போது அங்கு தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அந்த நிறுவனத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்தனர்.

திருப்பூரில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி பனியன் நிறுவனங்கள் செயல்பட்டால் அந்த நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News