செய்திகள்
கால்நடைகள்

வீட்டிலேயே கால்நடைகளுக்கு சிகிச்சை

Published On 2021-05-16 05:51 GMT   |   Update On 2021-05-16 05:51 GMT
முழு ஊரடங்கு காரணமாக உடுமலை பகுதியில் வீட்டிற்கே சென்று கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் பிரதானமான தொழிலாக கால்நடைவளர்ப்பு விவசாயிகளுக்கு பேரூதவியாக இருந்து வருகிறது.
 
இந்தநிலையில் முழு ஊரடங்கு காரணமாக கால்நடைகளுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடியாத நிலை உள்ளது. கால்நடை மருந்தகங்களில் சிகிச்சை அளிக்க முயற்சிக்கும் போது பல சிக்கல்கள் ஏற்படுகிறது.

இது குறித்து கால்நடைத்துறை அலுவலர்கள் கூறுகையில், 'முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் நோய்வாய்ப்படும் கால்நடைகளுக்கு வீடுதேடி சிகிச்சைஅளிக்கப்படுகிறது. கால்நடைகளுக்கான அவசர சிகிச்சைகளுக்கு டாக்டர்கள் வீடு தேடி சென்று சிகிச்சை அளிக்க கால்நடை ஆம்புலன்ஸ் உள்ளது. சிகிச்சையின் போது, சமூகவிலகலை கடைபிடிப்பது, முகக்கவசம் அணிவது உள்ளிட்டவை பின்பற்றப்படுகிறது என்றனர்.
Tags:    

Similar News