செய்திகள்
கொரோனா சிகிச்சை மையத்தினை அமைச்சர்கள் ஆய்வு செய்த காட்சி.

தாராபுரத்தில் அமைச்சர்கள் ஆய்வு

Published On 2021-05-15 07:21 GMT   |   Update On 2021-05-15 07:21 GMT
தாராபுரத்தில் ஆக்சிஜன் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தினை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.
தாராபுரம்:

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில்  கொரோனா நோயாளிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆக்சிஜன் வசதியுடன் கூடிய  படுக்கைகள்  குறித்து செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதில் கலெக்டர் விஜய கார்த்திகேயன்  மாவட்ட வருவாய் அலுவலர் சரவணகுமார், தாராபுரம் சப்-கலெக்டர் பவன்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
 
 தாராபுரம் ஐ.டி.ஐ மாணவர் விடுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 40 ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை அறைகளை பார்வையிட்டனர். பின்னர் அமைச்சர்கள் நிருபர்களிடம் கூறுகையில்,  ஆக்சிஜன் படுக்கைகள் கூடுதலாக தேவைப்படும் போது தாராபுரம் அடுத்த கொளத்தூபாளையத்தில் உள்ள அரசினர் உயர்நிலைப் பள்ளியிலும் மற்றும் தாராபுரத்தில் உள்ள  கல்லூரிகளிலும் படுக்கைகள் விரைவாக அமைக்கப்படும் என்றனர்.
Tags:    

Similar News