செய்திகள்
கோப்புபடம்

பொது ஊரடங்கு காலத்திலும் வங்கிகள் செயல்படும் - போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை

Published On 2021-05-09 07:59 GMT   |   Update On 2021-05-09 07:59 GMT
அனைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள், வாடிக்கையாளர்களுக்கு வழக்கமான சேவை அளிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

சென்னை:

ஊரடங்கு காலத்தில் வங்கிகள் தற்போதுள்ள கால அட்டவணைப்படி காலை 10 மணி முதல் பகல் 2 மணிவரை செயல்படுகிறது.

அனைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள், வாடிக்கையாளர்களுக்கு வழக்கமான சேவை அளிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.


அதன்படி நாளை முதல் வங்கிப் பணியாளர்கள் 50 சதவீத அளவில் பணியில் ஈடுபடுவார்கள். வாடிக்கையாளர்கள் முக்கியமான சேவைக்கு மட்டும் வங்கியை அனுகும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இது குறித்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் வெங்கடாச்சலம் கூறியதாவது:-

வங்கிகள் நாளை முதல் மறு உத்தரவு வரும்வரை காலை 10 மணி முதல் 2 மணி வரை செயல்படும். வங்கி பணியாளர்கள் பணிக்கு வருவதற்கு வசதியாக ரெயில், பஸ்சில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்.

அதற்கான ஏற்பாடுகளை மாநில அரசு வங்கி ஊழியர்களுக்கு செய்து தரவேண்டும். இந்த கால கட்டத்தில் குறைந்தபட்ச வாடிக்கையாளர் சேவை செய்ய மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News