செய்திகள்
அன்புமணி ராமதாஸ்

ஊரடங்கு காலத்தில் மின்சார கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Published On 2021-05-09 03:34 GMT   |   Update On 2021-05-09 03:34 GMT
ஊரடங்கால் வாழ்வாதாரம் இழக்கும் முடி திருத்துவோர், வாடகை வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைத்து தொழில் பிரிவினருக்கும் சிறப்பு நிவாரண தொகையை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை:

பா.ம.க. இளை ஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இதற்கு தமிழக மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். முழு ஊரடங்கு காலத்தில் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் அவர்களுக்கு நடப்பு சுழற்சிக்கான இரு மாத மின்சார கட்டணத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். இது கடந்த காலத்தில் தி.மு.க.வும் வலியுறுத்திய கோரிக்கை தான்.



ஊரடங்கால் வாழ்வாதாரம் இழக்கும் முடி திருத்துவோர், வாடகை வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைத்து தொழில் பிரிவினருக்கும் சிறப்பு நிவாரண தொகையை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News