செய்திகள்
கொரோனா வைரஸ்

தேனி மாவட்டத்தில் இன்று 6 பேர் கொரோனாவுக்கு பலி

Published On 2021-05-06 10:16 GMT   |   Update On 2021-05-06 10:16 GMT
தேனி மாவட்டத்தில் இன்று காலை வரை புதிதாக 466 பேருக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 22236-ஆக உயர்ந்துள்ளது.
ஆண்டிபட்டி:

தேனி மாவட்டத்தில் கொரோனா 2-ம் அலை வேகமாக பரவி வருகிறது. இதுவரை 21776 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் 19429 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

நேற்று புதிதாக 388 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று காலை மேலும் 466 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 460 பேர் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். 6 பேர் வெளியூர்களில் இருந்து வந்தவர்கள். நேற்று கொரோனா தொற்றால் கடமலைக்குண்டு, உத்தமபாளையம், குச்சனூர், சின்னமனூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

இன்று காலை சின்னமனூரை சேர்ந்த 38 வயது பெண், தேனியை சேர்ந்த 57 வயது பெண், 71 வயது ஆண், 54 வயது ஆண், உத்தமபாளையத்தை சேர்ந்த 70 வயது ஆண், 35 வயது ஆண் என மொத்தம் 6 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து தேனி மாவட்டத்தில் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 229 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து தொற்று அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதாரத்துறையினர் மற்றும் போலீசார் அபராதங்கள் விதித்தும், கட்டுப்பாடுகளை அதிகரித்தும் வருகின்றனர்.

Tags:    

Similar News