செய்திகள்
எடப்பாடி பழனிசாமி

நாளை மகாவீர் ஜெயந்தி விழா- எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

Published On 2021-04-24 07:59 GMT   |   Update On 2021-04-24 10:42 GMT
பகவான் மகாவீரரின் பிறந்த நாளை மகிழ்வுடன் கொண்டாடும் சமண சமயப் பெருமக்கள் அனைவருக்கும் “மகாவீர் ஜெயந்தி” வாழ்த்துகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

சமண சமயத்தின் 24-வது தீர்த்தங்கரரான பகவான் மகாவீரர் அவர்களின் பிறந்த தினத்தை கொண்டாடி மகிழும் சமண சமயப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த “மகாவீர் ஜெயந்தி” நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

பகவான் மகாவீரர் அவர்கள் போதித்த அகிம்சை, சத்தியம், கள்ளாமை, பற்றற்று இருத்தல், பிற உயிர்களுக்கு தீங்கு செய்யாமை போன்ற உயரிய நெறிகளை மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வில் பின்பற்றி வாழ்ந்தால் உலகில் அன்பும், அமைதியும் தழைத்தோங்கும்.

அறத்தையும், அகிம்சையையும் இரு கண்களாக போற்றிய பகவான் மகாவீரரின் பிறந்த நாளை மகிழ்வுடன் கொண்டாடும் சமண சமயப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது “மகாவீர் ஜெயந்தி” நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News