செய்திகள்
முககவசம்

அரக்கோணத்தில் முககவசம் அணியாத 15 பேருக்கு அபராதம்

Published On 2021-04-23 10:37 GMT   |   Update On 2021-04-23 10:37 GMT
கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் வீட்டை விட்டு வெளியில் வருபவர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்.
அரக்கோணம்:

கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் வீட்டை விட்டு வெளியில் வருபவர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும் என அரக்கோணம் நகராட்சி சார்பில் ஒலி பெருக்கி மூலமாக நகரம் முழுவதும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அரக்கோணம் நகராட்சி ஆணையாளர் ஆசீர்வாதம் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் அருள் தாஸ், செந்தில் குமார் மற்றும் ஊழியர்கள் நேற்று அபராதம் விதிக்கும் பணியை தாலுகா அலுவலகம் அருகே மேற்கொண்டனர்.

அப்போது முககவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களிலும், நடந்தும் வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோன்று பஸ்களை நிறுத்தி ஆய்வு செய்து முககவசம் அணியாமல் பயணம் செய்த பயணிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. மொத்தம் 15 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு ரூ.3 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. மேலும் நோய் தொற்றின் தாக்கம் குறித்து அவர்களிடம் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Tags:    

Similar News