செய்திகள்
ராமேசுவரம் கோவிலின் வடக்கு வீதி வெறிச்சோடி காணப்பட்டதை படத்தில் காணலாம்.

இரவு நேர ஊரடங்கு எதிரொலி: ராமேசுவரத்தில் 2-வது நாளாக வெறிச்சோடிய பஸ் நிலையம், ரதவீதி சாலைகள்

Published On 2021-04-22 14:13 GMT   |   Update On 2021-04-22 14:13 GMT
இரவு நேர ஊரடங்கு எதிரொலியாக ராமேசுவரத்தில் 2-வது நாளாக பஸ் நிலையம், கோவில் ரதவீதி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
ராமேசுவரம்:

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நேற்று முன்தினம் முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்தநிலையில் 2-வது நாளான நேற்று ராமேசுவரம் பகுதியில் இரவு 9 மணிக்கே அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு விட்டன.

கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டதால் ராமேசுவரம் முக்கிய வீதிகளான திட்டக்குடி சந்திப்பு சாலை, நடுத்தெரு மற்றும் கோவிலின் நான்கு ரத வீதி சாலை உள்ளிட்ட அனைத்து சாலைகளும் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டு வந்தன.

அதுபோல் ராமேசுவரத்திலிருந்து வெளியூர்களுக்கு புறப்படும் பஸ்கள் இரவு 7 மணியுடன் முடிவடைந்ததால் பஸ் நிலையமும் 2-வது நாளாக வெறிச்சோடி காணப்பட்டது.

Tags:    

Similar News