செய்திகள்
கோப்புபடம்

கோவையில் கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கி திருமணம் செய்ய மறுத்த வாலிபர் மீது வழக்கு

Published On 2021-04-22 12:18 GMT   |   Update On 2021-04-22 12:18 GMT
கோவையில் கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கி திருமணம் செய்ய மறுத்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிங்காநல்லூர்:

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள எஸ்.ஐ.எச்.எஸ். காலனியை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி. இவர் துடியலூரில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். இந்தநிலையில் மாணவிக்கு அதே பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் (வயது 21) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் காதலாக மாறியது.

மாணவியின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் அங்கு செல்லும் தினேஷ்குமார் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை ஜாலியாக இருந்தார். இதனால் மாணவி பலமுறை கர்ப்பமாகி உள்ளார். அப்போது தினேஷ்குமார் மாணவிக்கு கருக்கலைப்பு மாத்திரைகளை வாங்கி கொடுத்து கருவை கலைத்துள்ளார்.

தொடர்ந்து தினேஷ்குமார் மாணவியுடன் ஜாலியாக இருந்ததால் அவர் மீண்டும் கர்ப்பமானார். தற்போது மாணவி 3 மாத கர்ப்பமாக உள்ளார். இது குறித்து அவர் தனது பெற்றோரிடம் தெரிவித்தார். பெற்றோர் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தனர். ஆனால் தினேஷ்குமார் திருமணம் செய்ய மறுத்து விட்டார். இது குறித்து மாணவி அவரிடம் சென்று கேட்ட போது நாம் 2 பேரும் ஜாலியாக இருக்கும் போது எடுத்த புகைப்படங்களை சமூக வலை தளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டல் விடுத்தார்.

இதனால் பயந்த மாணவி இது குறித்து கிழக்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் மாணவியை கர்ப்பமாக்கி ஏமாற்றிய தினேஷ்குமார் மீது தொழில்நுட்பங்களை தவறாக பயன்படுத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கு உடந்தையாக இருந்த தினேஷ்குமாரின் தந்தை, தாய், உறவினரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News