செய்திகள்
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

அடுத்து வரும் 2 வாரங்கள் மிகவும் முக்கியமானது- ராதாகிருஷ்ணன்

Published On 2021-04-14 08:24 GMT   |   Update On 2021-04-14 08:24 GMT
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 81 ஆயிரம் படுக்கை வசதிகள் தயாராக உள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

போரூர்:

சின்ன போரூரில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏறுமுகமாக உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வருகிற நாட்களில் அதிகரிக்கும். மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் உள்ளன.

மேலும் 1.45 லட்சம் ரெம்டெசிவர் ஊசி மருந்து கையிருப்பில் உள்ளது. இது நோய் எதிர்ப்பை வலுப்படுத்தும். மாஸ்க் அணியாத 2.39 லட்சம் பேரிடம் இருந்து ரூ5.7 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி இதுவரை 40.99 லட்சம் பேருக்கு போடப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு வருகிற இரண்டு வாரம் மிக மிக முக்கியமானது. எனவே, அடுத்த இரண்டு வாரம் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிந்தால் கொரோனா பரவும் எண்ணிக்கை குறையும்.

நோய் தொற்றை தடுத்திட பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவை. தேவையற்ற பயணம், பொது இடங்களுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். வீட்டில் இருந்து பணி செய்ய கூடியவர்கள் அதை தொடர்ந்து கடைபிடிக்கலாம்.


தடுப்பூசி செலுத்துவதற்காக 4,792 இடங்கள் உள்ளது. ரஷிய தடுப்பூசி கொள்முதல் செய்யப்பட்ட பின் தமிழகத்திற்கு வரும். 1:6 என்ற அடிப்படையில் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் வழங்கப்பட்டு வருகிறது.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 81 ஆயிரம் படுக்கை வசதிகள் தயாராக உள்ளது. அடுத்த வாரத்திற்குள் மேலும் 15 ஆயிரம் படுக்கைகள் தயார் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை மாநகராட்சி கமி‌ஷனர் பிரகாஷ் கூறும்போது, ''சென்னையில் 12 ஆயிரத்து 500 படுக்கைகள் தயாராக உள்ளன. இதுவரை 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. 15 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன'' என்றார்.

Tags:    

Similar News