செய்திகள்
குளித்தலை காவிரி நகர்ப்பகுதியில் சாய்ந்த நிலையில் உள்ள தடுப்பை படத்தில் காணலாம்.

குளித்தலை பகுதியில் அமைக்கப்பட்ட தடுப்புகளை அகற்ற வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

Published On 2021-04-09 12:42 GMT   |   Update On 2021-04-09 12:42 GMT
சட்டமன்ற தேர்தலை தேர்தலையொட்டி குளித்தலை பகுதியில் அமைக்கப்பட்ட தடுப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குளித்தலை:

சட்டமன்ற தேர்தலையொட்டி குளித்தலை நகர பகுதிக்குட்பட்ட கடம்பர் கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. கரூர்-திருச்சி சாலையில் உள்ள கடம்பர் கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் இருந்த வாக்குச்சாவடிகளுக்கு வாகனங்களில் வரும் வாக்காளர்களையும் அப்பகுதியில் வரும் வாகனங்களையும் கட்டுப்படுத்தும் பொருட்டும் சாலையோரமும், காவேரி நகர் பகுதியிலும் பெரிய குச்சிகள் கொண்டு அதில் கயிறு கட்டப்பட்டு அது மேலும் கீழும் இயக்கும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டன.

இந்தநிலையில் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் இந்த தடுப்புகள் அகற்றப்படாத காரணத்தால், குறிப்பாக காவிரி நகர்ப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த தடுப்பு சற்று சாய்ந்த நிலையில் இருப்பதால் இந்த வழியாக பாரம் ஏற்றி வரும் வாகனங்கள் வரும்போது அந்தக் குச்சியில் ஆன தடுப்பு தேக்குகிறது.

இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே வாகன ஓட்டிகளின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக தடுப்புகளை அகற்ற வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News