செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு

Published On 2021-03-27 06:37 GMT   |   Update On 2021-03-27 06:37 GMT
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.33,856-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

தங்கம் விலையில் ஏற்றத்தாழ்வு இருந்து வருகிறது. கடந்த 23-ந்தேதி முதல் இரண்டு நாட்கள் விலை உயர்ந்தது. நேற்று முன்தினமும், நேற்றும் விலை குறைந்தது. நேற்று பவுனுக்கு ரூ.112 குறைந்து ரூ.33 ஆயிரத்து 728-க்கு விற்றது.

இந்தநிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்தது. சென்னையில் இன்று காலை தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.128 அதிகரித்து ரூ.33 ஆயிரத்து 856-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 232ஆக உள்ளது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.200 குறைந்து ரூ.69 ஆயிரத்து 300ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.69.30-க்கு விற்கிறது.
Tags:    

Similar News