செய்திகள்
துரைமுருகன்

வருமான வரித்துறை சோதனையில் அரசியல் உள்நோக்கம் உள்ளது -துரைமுருகன்

Published On 2021-03-25 12:21 GMT   |   Update On 2021-03-25 12:21 GMT
வருமான வரித்துறைக்கு கிடைக்கும் தகவலின் அடிப்படையில்தான் சோதனை நடைபெறுகிறது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
சென்னை:

திமுக எம்.எல்.ஏ.வும் திருவண்ணாமலை வேட்பாளருமான எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்துகின்றனர். சென்னை, திருவண்ணாமலை உட்பட 18 இடங்களில் சோதனை நடத்துகின்றனர். எ.வ.வேலுவின் இல்லம், பள்ளி, கல்லூரிகள், அறக்கட்டளை, நிதி நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெறுகிறது.

திருவண்ணாமலையில் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்ட நிலையில், வருமான வரி சோதனை நடைபெறுவதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு உருவாகி உள்ளது.

வருமான வரித்துறையினர் மேற்கொள்ளும் சோதனையில் அரசியல் உள்நோக்கம் உள்ளது என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் குற்றம்சாட்டி உள்ளார். தோல்வி பயத்தின் காரணமாகவே, மத்திய அரசை அதிமுக தூண்டி விட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதுபற்றி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறுகையில், வருமான வரித்துறைக்கு கிடைக்கும் தகவலின் அடிப்படையில்தான் சோதனை நடைபெறுகிறது என்றார். வருமான வரித்துறை சோதனைக்கும் தேர்தலுக்கும் சம்பந்தம் இருக்கிறதா? என்பது விசாரணைக்குப் பிறகே தெரியவரும் என்றும் அவர் கூறினார்.
Tags:    

Similar News