செய்திகள்
போலீசார் விசாரணை

நெல்லையில் ஒரே நாளில் 100 ரவுடிகள் சிக்கினர்- போலீசார் விசாரணை

Published On 2021-03-06 08:41 GMT   |   Update On 2021-03-06 08:41 GMT
நெல்லையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை நடைபெற்ற போலீசாரின் அதிரடி தேடுதல் வேட்டையில் 100 ரவுடிகள் சிக்கினர்.
நெல்லை:

தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லை மாவட்டம் மற்றும் மாநகர் பகுதியில் ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகிறார்கள்.

பல முன்னாள் ரவுடிகளை பிடித்து விசாரித்து, அவர்களிடம் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பப்படுகிறார்கள்.

நெல்லை மாவட்டம் மற்றும் மாநகரப்பகுதிகளில் இதுவரை சுமார் 25 பேர் வரை கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் மாவட்டத்தில் 300 பழைய ரவுடிகள், மாநகரில் 75 பழைய ரவுடிகள் கண்டறியப் பட்டு அவர்களிடம் எழுதி வாங்கி அனுப்பி உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை நடைபெற்ற போலீசாரின் அதிரடி தேடுதல் வேட்டையில் 100 ரவுடிகள் போலீசாரிடம் சிக்கினர். இவர்களிடம் அந்தந்த போலீஸ் நிலையத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இவர்களில் எத்தனை பேர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளதோ அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். மற்ற பழைய ரவுடி களிடம் போலீசார் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்புவார்கள் என்று கூறப்படுகிறது.
Tags:    

Similar News