செய்திகள்
கறுப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

தேர்தலை புறக்கணிப்பதாக கூறி வீடுகளில் கறுப்பு கொடி கட்டி பொதுமக்கள் போராட்டம்

Published On 2021-03-05 09:53 GMT   |   Update On 2021-03-05 09:53 GMT
தங்களுக்கு சுடுகாட்டிற்கு தனி இடம் ஒதுக்கவில்லை எனில் வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக செங்கலுத்துப்பாடி கிராம மக்கள் தெரிவித்து உள்ளனர்.
ஏற்காடு:

சேலம் மாவட்டம் ஏற்காடு பஸ் நிலையத்தில் இருந்து, 22 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது செம்மநத்தம் ஊராட்சிக்குட்பட்ட செங்கலுத்துப்பாடி கிராமம். இக்கிராமத்திற்கு சுடுகாட்டுக்கு என்று தனி இடம் கிடையாது.

இந்த கிராமத்தில் 200-க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தங்கள் கிராமத்தில் சுடுகாட்டு வசதி இல்லாததால் உயிரிழப்புகள் நேரிடும் போது அவர்களை புதைப்பதற்கு பெரும் சிரமப்படுவதாகவும், எனவே தங்கள் கிராமத்தை ஒட்டியுள்ள சர்வே எண்கள் 14/2 கி மற்றும் 15 ஆகிய தரிசு நிலங்களில் தங்களுக்கு சுடுகாடு ஒதுக்க வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளனர்.

தங்களுக்கு சுடுகாட்டிற்கு தனி இடம் ஒதுக்கவில்லை எனில் வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து உள்ளனர். இதை தொடர்ந்து தங்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News