செய்திகள்
கோப்புபடம்

திருப்பூர் அருகே கடையின் மேற்கூரையை உடைத்து துணிகர கொள்ளை - தொடரும் சம்பவத்தால் உரிமையாளர்கள் அச்சம்

Published On 2021-03-04 12:54 GMT   |   Update On 2021-03-04 12:54 GMT
திருப்பூர் அருகே கடையின் மேற்கூரையை உடைத்து பணம், சிசிடி கேமரா கொள்ளை போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாராபுரம்:

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உடுமலை சாலையில் தனியார் ஹார்டுவேர் கடை செயல்பட்டு வருகிறது. உரிமையாளர் தொழில் நிமித்தமாக ராஜஸ்தான் சென்றுள்ளதால் ஊழியர்கள் கடையை கவனித்து வந்தனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று ஊழியர்கள் வழக்கபோல கடையை பூட்டி விட்டு சென்றனர். பின்னர் காலை கடையை திறந்த போது மேற்கூரை உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே உரிமையாளருக்கும், போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. கடையில் இருந்த ரூ.45 ஆயிரம் பணம், சி.சி.டி.வி.கேமராவின் ஹார்டு டிஸ்க், டிவு, கம்ப்யூட்டர் உள்ளிட்டவைகளை கொள்ளையர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இது குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். கடையின் மேற்கூரையை உடைத்து கொள்ளையடிக்கும் சம்பவம் திருப்பூரில் பெரும்பாலன இடங்களில் நடந்து வருவதால் பொதுமக்களும், கடை உரிமையாளர்களும் பெரும் அச்சத்தில் உள்ளனர். திருப்பூர் நெருப்பரிச்சல் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடுத்த அடுத்த 4 கடைகளில் மேற்கூரையை உடைத்து கொள்ளை போயிருப்பது குறிப்பிடதக்கது.

Tags:    

Similar News