செய்திகள்
கைது

தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை- நெல்லையில் 5 ரவுடிகள் கைது

Published On 2021-03-04 07:38 GMT   |   Update On 2021-03-04 07:38 GMT
நெல்லை தச்சநல்லூர் பகுதியில் தேர்தல் நடவடிக்கைகளுக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட 5 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:

தேர்தல் நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படும் ரவுடிகளை கைது செய்து சிறையில் அடைக்க நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவின் குமார் அபிநவ் உத்தரவிட்டுள்ளார்.

நெல்லை மாநகரிலும் போலீஸ் கமி‌ஷனர் அன்பு உத்தரவின் பேரில் தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரவுடிகளை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

நெல்லை தச்சநல்லூர் பகுதியில் தேர்தல் நடவடிக்கைகளுக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட ரவுடிகளான தச்சநல்லூரை அடுத்த மேலக்கரையை சேர்ந்த குமுளி ராஜ் குமார், கம்மாளன்குளத்தை சேர்ந்த அருண்குமார், படப்பை குறிச்சியை சேர்ந்த வினோத் பாண்டியன் ஆகிய 3 பேரை தச்சநல்லூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பாளை சமாதானபுரம் பகுதியில் கஞ்சா போதையில் பெண்களிடம் தகராறு செய்து ரகளை செய்த ரவுடி களான மேலக்குளத்தை சேர்ந்த கணேசன், விக்னேஷ் ஆகிய 2 பேரையும் பாளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுபோல மாநகர பகுதியில் தேர்தல் நடவடிக்கைகளுக்கு குந்தகம் ஏற்படுத்தும் மேலும் பல்வேறு ரவுடிகளை துணை போலீஸ் கமி‌ஷனர் சீனிவாசன் மேற்பார்வையில் போலீசார் தேடி வருகிறார்கள்.

இதுபோல தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங் ஆகியோர் மேற்பார்வையில் அந்தந்த மாவட்டங்களிலும் ரவுடிகளை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

Tags:    

Similar News