செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்தது

Published On 2021-02-26 06:53 GMT   |   Update On 2021-02-26 06:53 GMT
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்து ஒரு சவரன் ரூ.34,912-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்ற-தாழ்வு இருந்து வருகிறது. கடந்த 19-ந்தேதி பவுன் ரூ.35 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. அதன் பின் விலை உயர்ந்து ரூ.35 ஆயிரத்தை தாண்டியது. நேற்று பவுனுக்கு ரூ.328 குறைந்து ரூ.34 ஆயிரத்தை 976-க்கு விற்றது. இதனால் மீண்டும் பவுன் ரூ.35 ஆயிரத்துக்கு கீழ் வந்தது.

இந்த நிலையில் இன்று காலை தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.64 குறைந்து ரூ.34 ஆயிரத்து 912-க்கு விற்கிறது. கிராமுக்கு ரூ.8 குறைந்து ரூ.4 ஆயிரத்து 364 ஆக உள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ.1000 குறைந்து ரூ.74 ஆயிரமாக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.74-க்கு விற்கிறது.
Tags:    

Similar News