செய்திகள்
விபத்து பலி

திருப்பத்தூரில் கார் மோதி மூதாட்டி பலி

Published On 2021-02-26 04:59 GMT   |   Update On 2021-02-26 04:59 GMT
திருப்பத்தூரில் கார் மோதி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர்:

திருப்பத்தூர் ஆபாய் தெருவை சேர்ந்தவர் நாகம்மாள் (வயது 65). இவர், நேற்று அந்த பகுதியில் உள்ள சாலையை கடக்க முயன்ற போது, அந்த வழியாக சென்ற கார் திடீரென அவர் மீது மோதியது. இதில் நாகம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News